இறகுபந்து போட்டி மாணவர்கள் சிறப்பிடம்

அரவக்குறிச்சி:அரவக்குச்சி ஒன்றிய அளவிலான இறகுப்பந்து போட்டி, கரூர் ஆபீசர் கிளப்பில் நடந்தது. இப்போட்டியில் அரவக்குறிச்சி குறுவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகள் கலந்துகொண்டன.

இதில், பள்ளபட்டி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரும் கலந்துகொண்டு, 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முதலிடம் பிடித்தனர். மேலும், 17 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். அதேபோல், 19 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடமும், 17 வயதிற்குட்பட்ட பிரிவு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், இரண்டாமிடமும் பெற்றனர். அதேபோல், 14 வயத்திற்குட்பட்ட மாணவர்கள் பிரிவு இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர்.பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். தாளாளர் கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர், பாராட்டுகளையும்,
வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Advertisement