கரூரில் நாளை வேளாண் கண்காட்சி
கரூர்:'கரூரில், நாளை வேளாண் கண்காட்சி நடக்கிறது' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர்,
தான்தோன்றிமலை நாயுடு மஹாலில் வேளாண்துறை சார்பில் வேளாண்
கண்காட்சி, நாளை காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், வேளாண்,
தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு,
தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் உள்பட பல வேளாண் சார்ந்த துறைகள் பங்கேற்று
கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இக்கண்காட்சியில், வேளாண் பல்கலை வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயி
களுக்கு
தேவையான புதிய தொழில்நுட்பம் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவாக
கூறியுள்ளனர். வேளாண் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல்
நிகழ்ச்சிகள் நடக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள், வயல்வெளிகளில்
ஏற்படும் பிரச்னைகளுக்கு நேரடி தீர்வும் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஈரான் மீது 11வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் மறுப்பு
-
எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்
-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்; 2 ஆண்டுக்கு பிறகு புதிய வரி அறிவித்தார் டிரம்ப்
-
காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்
-
பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
-
எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்