மகள் மாயம் தந்தை புகார்

கரூர்:கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், பாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் கிருஷ்ணவேணி, 23; பிளஸ் 2 படித்துள்ளார்.

கடந்த, 20ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற, கிருஷ்ணவேணி திரும்பி வரவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், கிருஷ்ணவேணி செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த தந்தை அண்ணாதுரை, 50, போலீசில் புகாரளித்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement