'அதிகார துஷ்பிரயோகம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வேண்டும்'
கரூர்:'சங்க
மாவட்ட செயலாளர் ராஜா மீது போலீசார், மதுவிலக்கு போலீசார்,
வருவாய்த்துறையினர் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்தது
குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, தமிழக
விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, கரூர் கலெக்டர்
அலுவலகத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், தென்னிலைக்கு அருகே மசையாம்பாளையத்தில், 10
ஆண்டுகளுக்கு மேலாக, சட்டவிரோதமாக கல்குவாரியில் கற்களை வெட்டி
கடத்தி வருகின்றனர். இது
குறித்து தொடர்ந்து புகாரளித்து வந்த
பிரபு என்பவர், அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்ததாக கைது
செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேடு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த
தென்னிலை போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி கேட்கப்பட்டது.
தமிழக
விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலர் ராஜா, ஆர்ப்பாட்டம்
நடத்தக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர். பின், அவரது
தோட்டத்தில் கள் இறக்குவதாக எழுந்த பொய் புகாரில், கைது செய்து
ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இப்படி போலீசார், மதுவிலக்கு
போலீஸ், வருவாய்த்
துறையும் அதிகார துஷ்பிரயோகம் செய்து
வருகின்றனர். இந்த பிரச்னையை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி
தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஈரான் மீது 11வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் மறுப்பு
-
எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்
-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்; 2 ஆண்டுக்கு பிறகு புதிய வரி அறிவித்தார் டிரம்ப்
-
காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்
-
பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
-
எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்