வாங்கல் சாலையோரம் கழிவுகள் துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு

கரூர்:கரூர், வாங்கல் சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர்-வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்டியதும், சாலையோரம் அதிகளவு கோழி கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுகிறது.
இதனால், வீசும் கடும் துார்நாற்றம் காரணமாக, வாகன ஓட்டிகளும், இந்த பகுதியை சுற்றிலும் வசிக்கும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். துர்நாற்றத்தை ஏற்படுத்தும் இந்த கோழிக்கழிவு உள்பட பல்வேறு கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement