பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சிபுரத்தில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெருமாள் தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக வழிந்தோடும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் பெருமாள் தெரு வழியாக ஏகாம்பரநாதர் கோவில், புதிய ரயில் நிலையம், பொன்னேரிக்கரை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, பெருமாள் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement