கலெக்டர் ஆய்வு
தேனி:தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளின் தண்மை குறித்து கேட்டறிந்து திட்டமிட்ட காலத்திற்குள் பணியினை முடிக்க உத்தரவிட்டார்.
ஆண்டிபட்டி வைகை அணைப்பகுதியில் உள்ள மீன்வளம், மீனவர் நலத்துறை மூலம் மீன்குஞ்சு வளர்ப்பு மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் மீன் உணவம் செயல்படுத்த அறிவுறுத்தினார். ஆய்வின்போது தேனி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் முத்துசித்ரா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் சவுந்தரபாண்டியன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement