வழிப்பறி: 3 பேர் கைது

பேரூர்: காளம்பாளையம், விவேகானந்தர் வீதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், 61, வீட்டில் தனியாக இருந்தபோது, பிளம்பிங் வேலை உள்ளதா என கேட்டு 3 பேர் வந்தனர். கத்தி முனையில், ராமகிருஷ்ணனை மிரட்டி, ஜிபே மூலம் 8 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர். பேரூர் போலீசார் விசாரித்து, காளம்பாளையம் ஸ்ரீ ஹரி, 23, பேரூர் சுராஜ், 25 அவரது தம்பி நிதிஷ், 24 ஆகியோரை கைது செய்தனர்.

-- முன் விரோதம்; வாலிபருக்கு கத்திகுத்து ரத்தினபுரி: அண்ணா நகரை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ், 29. இவருக்கும், சங்கனுார், காமாட்சி நகர் கார்த்திகேயன்,35, ஆனந்தகுமார்,47, ஆகியோருக்கும் முன் பகை இருந்தது. கண்ணப்பன் நகரில், நேற்று முன்தினம் இரவு சூர்யபிரகாஷ் நின்றிருந்தார். அங்கு வந்த கார்த்திகேயன், ஆனந்தகுமார் அவருடன் சண்டை போட்டனர். பின்னர், சூர்யபிரகாசை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். ரத்னபுரி போலீசார் தேடி வருகின்றனர்.

--

பிளாக்கில் மது விற்றவர் கைது பீளமேடு: தொட்டிபாளையம் பிரிவில் டாஸ்மாக் மதுவை பிளாக்கில் விற்ற அத்திகுட்டை கோபால்,39, என்பவரை மதுவிலக்கு போலீஸ் கைது செய்தனர். 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

--

கஞ்சா விற்றவர் கைது சிங்காநல்லுார்: ஒண்டிப்புதுார் பாலத்தின் கீழ் கஞ்சா விற்ற வரதராஜபுரம் சுஜித்,23, கபிலேஷ்,21, ஆகியோரை கைது செய்த போலீஸ், ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

--

தந்தையை தாக்கிய மகன் கைது பெரிய கடை வீதி: ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார், 52, மகன் மதன்ராஜ், 22, அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வாராம். அதை கண்டித்த அப்பாவை மது பாட்டிலால் அடித்துள்ளார். தலையில் காயம் அடைந்த சரவணகுமார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெரிய கடைவீதி போலீசார் மதன்ராஜை சிறையில் அடைத்தனர்.

--



Advertisement