ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
டோக்கியோ: ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது; நாடு முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டன; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ரிக்டர் ஆக பதிவாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 10 கி.மீ (6 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சேதங்கள் தொடர்பான நிலைமையை கூடிய விரைவில் மதிப்பிடுமாறு ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
* மனித உயிர்களுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* அவசரகால பேரிடர் மீட்புப் பணிகளில் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
ஜப்பானின் தெற்கு கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, புகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி மாகாணங்களுக்கும் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்ட உள்ளது.
சேதங்கள் எதுவும் இல்லாமல் மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.