'அப்பாச்சி ஆர்.ஆர்., 200 மினி ஜிபி' சிறுவர்களுக்கான டி.வி.எஸ்., ரேஸ் பைக்
'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், 'அப்பாச்சி ஆர்.ஆர்., 200 மினி ஜிபி' என்ற சிறுவர்களுக்கான ரேஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் 15 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பைக் ரேஸில் பங்கேற்க முடியும். எனவே, சிறு வயதில் இருந்தே பைக் ரேஸ் தொடர்பான அனுபவத்தை வழங்க, 'டி.வி.எஸ்., அப்பாச்சி சிறுவர்கள்' திட்டத்தை இந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாக, 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, பைக் ரேஸ் தொடர்பான ஆரம்ப பயிற்சியை இந்நிறுவன வழங்குகிறது.
இந்த சிறிய பைக், 'அப்பாச்சி 200 4வி' பைக்கை, மறுசீரமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 197.75 சி.சி., ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. வெறும் ஐந்து வினாடியில், 80 கி.மீ., வேகத்தை எட்டும் திறன் உடையது. டாப் ஸ்பீடு 110 கி.மீ.,ராக உள்ளது. 90 கிலோ எடை உள்ள இந்த பைக்கின் சீட் உயரம், 690 எம்.எம்., ஆகும்
ரேஸ் ட்யூன் செய்யப்பட்ட யூ.எஸ்.டி., போர்க், மோனோ ஷாக் சஸ்பென்ஷன், 12 அங்குல அலாய் சக்கரங்கள், ரேஸ் காம்பவுண்ட் டயர்கள், டிஸ்க் பிரேக், குறைந்த எடை வெளிப்புற பிரேம், அலுமினிய பெட்ரோல் டேங்க், கார்புரேட்டர் எரிபொருள் அமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன.
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்