டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா 

2

தி.நகர்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற டாக்டர் எம்.கே.சீனிவாசனின், 100வது பிறந்த நாள் விழா, தி.நகரில் நேற்று நடந்தது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலமேலு தம்பதிக்கு, 1927ம் ஆண்டு 5வது மகனாக பிறந்தவர் எம்.கே.சீனிவாசன். இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், 1945ம் ஆண்டு மருத்துவம் படித்தார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார். கடந்த 1950ம் ஆண்டு இந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது மகள்கள் லக்ஷ்மி மற்றும் மாலதி.

டாக்டர் எம்.கே.சீனிவாசனின் 100வது பிறந்தநாள் விழா, நேற்று தி.நகரில் உள்ள சக்கர விநாயகர் கோவிலில் நடந்தது.

அவர் பேசுகையில், ''எனக்காக இங்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சங்கீதத்தை போல் மனதிற்கு சாந்தி அளிப்பது, வேறு ஏதும் இல்லை. மனதில் எந்த கவலை இருந்தாலும், பாடல்கள் பாடினால் மனசு சாந்த மாகிவிடும்,'' என்றார்.

நிகழ்வில் ஆடிட்டர் ருத்ர குமார் பேசுகையில், ''டாக்டர் எம்.கே.சீனிவாசனிடம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிப்பது போலவே, ஏழை தொழிலாளியின் குடும்பத்தையும் பார்ப்பார்.

''விடியற்காலை 3:00 மணி வரைக்கும் நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பார். அவரது நற்பண்புகள் மற்றும் சேவைகளை பார்த்து தான், என்னாலும் செய்ய முடியும் என நம்பிக்கை வந்தது,'' என்றார்.

Advertisement