5 ஆண்டுகளில் அபார வளர்ச்சி; ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்கள் 576 பேர்!
நமது சிறப்பு நிருபர்
576 இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கின்றனர்; 5 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 300% அதிகரித்துள்ளது என பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. மத்திய நிதி அமைச்சகம் பகிர்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பார்லிமென்டில் கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:
* ஆண்டுக்குக் குறைந்தது ரூ.100 கோடி சம்பாதிக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை 2021ம் ஆண்டிலிருந்து 300%க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த அபார வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது.
* ஆண்டு வருமானம் ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் ஈட்டுவதாகத் தெரிவிக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. 2024-25ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 415 ஆக இருந்தது.
* ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2021-22ம் ஆண்டில், வெறும் 142 வரி செலுத்துவோர் மட்டுமே குறைந்தபட்சம் ரூ. 100 கோடி ஆண்டு வருமானத்தை ஈட்டி வந்தனர்.
* 2021-22ம் ஆண்டில் 142 ஆக இருந்த எண்ணிக்கை, 2022-23ம் ஆண்டில் 301 ஆக உயர்ந்து, பின்னர் 2023-24ம் ஆண்டில் 284 ஆக சரிந்தது. அதன் பிறகு, 2024-25ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 415 ஆக மீண்டும் அதிகரித்தது. 2025-26ம் ஆண்டில் மேலும் அதிகரித்து 576 ஆனது.
* கோடீஸ்வரர்களின் பணம் குறித்த தரவுகளை அரசு பராமரிப்பதில்லை.
* 2013-14 மற்றும் 2022-23ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 24.82 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
150 கோடி மக்களில் 576 பேர் அபாரமான வளர்ச்சி.
இது ஒரு பெருமை.
எருமைக்கு தெரியுமா பெருமை.... ஹி.. ஹி...
எல்லா புகழும் ஜி யையே சாரும் ...ஏழை மக்களுக்காக எப்டிலாம் உழைக்கிறார் ...
அறிவிலி அவர்கள் சொந்த உழைப்பில் உயர்ந்தவர்கள்... ஏழைகளும் முன்னேறி கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் இன்னும் மூளை valarchiye ஏற்றாமல் இருக்கிறார்கள்
நாதன் பரம ஏழையாக இருப்பதால் ஏழைகளை பற்றி அதிகம் கவலைப்படுகிறார்
திமுகவின் அமைச்சர்கள், வட்ட, மாவட்ட செயலாளர்களை சேர்த்தால் பல்லாயிரம் பேர் வருவார்கள். ஆனால் அவர்கள் வருமான வரி கட்டவே மாட்டார்கள், வருமான வரித்துறை, ED போன்ற துறைகளுக்கு வேலை கொடுப்பவர் கள்.
ஓ, நம்ம பணம் அங்கே தான் போகுதா?
விருமாண்டிக்கு எப்படி பணம் வருது...விசாரிக்கணும்
மூர்கன் பணமா?
இரண்டே ஆண்டுகளில் முப்பதாயிரம் கோடி சம்பாதித்த தொழிலதிபர் பற்றி தெரியுமா .
விடியல் சார்மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்