பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி; முதல்வர் விஜய் பரிசீலனை
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது தொடர்பாக முதல்வர் விஜய் பரிசீலனை செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; தமிழக அரசும், தமிழக வெற்றிக் கழகமும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் எப்போதும் முதன்மை அளிக்கும். கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இது மாறி இருக்கலாம். ஸ்டாலின் முதல்வராக இருக்கும் போதே, கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகத்தான் பாடப்பட்டது.
முதல்வர் விஜய்யிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அதற்கான தரவுகளையும் வழங்கியுள்ளேன். நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையை சீர்படுத்துவது, சத்துணவுக்கு ஒரு குழந்தைக்கு ரூ.11.50 தான் வழங்கப்படுகிறது.
இப்போது ஒரு மேகி பாக்கெட்டே ரூ.10க்கு விற்கப்படுகிறது. ரவை உப்புமா, கோதுமை உப்புமாக்களில் இருந்து குழந்தைகளுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது என்பது தெரியவில்லை. எனவே, காலை உணவை ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், அருசுவை நிறைந்த உணவாகவும் மாற்ற முடிவு செய்துள்ளோம்.
நீதிக்கட்சி உணவை கொண்டு வந்தது. காமராஜர் ஆட்சி அதை மதிய உணவாக மாற்றியது. கருணாநிதி முட்டை கொண்டு வந்தார். எம்ஜிஆர் அதனை சத்துணவாக மாற்றினார். ஜெயலலிதா வாரந்தோறும் முட்டை கொண்டு வந்தார். இது மாதிரி பல மாற்றங்கள் இருந்தன.
அதுபோல எனக்கும் ஒரு ஆசை வந்தது. வாரத்தில் ஒரு முறை சிக்கன் பிரியாணி போடலமாமே என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளேன். அது பலதுறைகள் சம்பந்தப்பட்டது. முதல்வர் இது குறித்து பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நல்ல லெக் பீசா குடுங்க அங்கிள்
கீழ உள்ளவங்கே அழுகிய கறிய போட்டு குழந்தைகள் சாவதற்கா
இந்த முதல்வரும் பழைய நிரந்தர முதல்வர் போலவே பல விஷயங்களில் செயல் படுகிறார் தனக்கு யோசிக்கத் தெரியாது ஆட்சி செய்யவும் தெரியாது என்று அடிக்கடி நிரூபிக்கிறார் ஆட்சி மாற்றம் ஏமாற்றமே
முதல்வர் இப்படியெல்லாம் சிந்திக்க கூடாது.
உண்மையான படிப்பு தந்தாலே போதும்
முட்டயே அழிகி போனத் போட்டு விட்டு விடுகிறார்கள்....
please do something to improve their knowledge and skill also
sow the seeds of self confidence
இப்போ ஏழ்மை இல்லை... இலவச உணவை கேன்சல் செய்யலாம்.. அரசாங்கத்துக்கு நிறைய பணம் மிச்சமாகும்.
You are absolutely correct. But but, what about vote bank?
Not a good move
நான்வெஜ், விரைவில் கெடக்கூடிய உணவு. இறைச்சி வாங்கி அதனை மைனஸ் 18 டிகிரியில் ஸ்டோர் பண்ணவேண்டும். இல்லையேல் அதுவே விஷமாகும். அதற்கு வாக் இன் பிரீஸர் எல்லா பள்ளியிலும் அமைக்கவேண்டும். சமையல் ஆட்கள் அதிமாக வேண்டும். வெளியில் ஆர்டர் செய்து வாங்கினால் தரம் இருக்காது. ஊழல் பெருகும். பள்ளி கூரை இடிந்து விழுகிறது அதை சரி செய்ய வழி இல்லை. இதில் சிக்கன் பிரியாணி.மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்