அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி   

கள்ளக்குறிச்சி: செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட தொகுப்பு கண்காட்சி நடந்தது. 

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட தொகுப்பு பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி தியாகதுருகம் அடுத்த பிரதிவிமங்கலம் கிராமத்தில் அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய அரசு நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் முதல்வரின் சிறப்பு திட்டங்கள் அடங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றது.  இந்த புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Advertisement