திருக்கோவிலுாரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலுார்: தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 2010 ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தற்போது நடைபெற்ற டெட் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்கோவிலுார் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டாரத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். வட்டார மகளிர் அணி செயலாளர் கவிதா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த கட்டிட பிரிவு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் செல்லபாண்டியன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாநில கூடுதல் தலைவர் திருமலை, மாவட்டத் துணைச் செயலாளர் ராமலிங்கம், மாநில துணைப் பொதுச் செயலாளர் சதீஷ், மாநில செயற்குழு உறுப்பினர் கருணா மூர்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
வட்டார பொருளாளர் முரளி நன்றி கூறினார்.
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்