திருநங்கைகளுக்கு குறைகேட்பு கூட்டம்

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் ஆக. 7ம் தேதி நடக்கிறது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில், திருநங்கைகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் ஆக. 7 ம் தேதி, காலை, 11:00 மணிக்கு நடைபெறும். திருநங்கையர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement