அக்கராயபாளையத்தில் திருத்தேர் திருவிழா
கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 21 ம் தேதி காப்பு கட்டுதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து இரவில் அம்மன் வீதி உலா, பால்குடம் எடுத்தல், ஊரணி பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை செய்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு அங்கப்பிரதட்சணம், அலகு குத்தி பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்
Advertisement
Advertisement