கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
வானுார்: கிணற்றில் தவறி விழுந்து இறந்த முதியவரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.கிளியனுார் அடுத்த அருவாப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன், 80; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்து சென்றார். அப்போது அப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.இதற்கிடையே அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இருப்பினும் சந்தேகத்தின் பேரில் கிணற்றில் சென்று பார்த்த போது, அவர் தவறி விழுந்து இறந்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்
Advertisement
Advertisement