மினி டெம்போ வாகனம் மோதி கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
உளுந்துார்பேட்டை. ஜூலை 30–: உளுந்துார்பேட்டை அருகே பொலிரோ பிக் அப் வாகனம் மோதி கார் கவிழ்ந்து விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
பெரம்பலுார் மாவட்டம் பொன்னம் தாலுகா சுங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செங்கமலை மகன் ஷாம் குமார் 20. இவர் உள்ளிட்ட 5 பேர் பெரம்பலூரில் இருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஷிப்ட் டிசையர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
நேற்று காலை 5.25 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த பு. மாம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது. பின்னால் வந்த பொலிரோ பிக் அப் வாகனம் கார் மீது மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஷாம்குமார். செங்கமலை மனைவி ரேணுகா 46, செங்கமலை 59. ராயப்பன் மகன் பாலாஜி 38. ராயப்பன் 70 ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்