இரண்டாவது சுற்றில் உன்னதி: தைபே ஓபன் பாட்மின்டனில்
தைபே சிட்டி: தைபே ஓபன் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு இந்தியாவின் உன்னதி ஹூடா, பிரனாய், கிரண் ஜார்ஜ், தருண் உள்ளிட்டோர் முன்னேறினர்.
சீனதைபேயில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற தைபே ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் பெய் யு வாங் மோதினர். இதில் உன்னதி 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-15, 11-21, 21-19 என, அமெரிக்காவின் இஷிகாவை வீழ்த்தினார். இந்தியாவின் தான்யா 21-16, 14-21, 21-16 என சீனதைபேயின் வென் சி ஹசுவை வீழ்த்தினார். இந்தியாவின் தான்வி சர்மா 21-16, 22-20 என, சகவீராங்கனை தஸ்னிம் மிர்ரை தோற்கடித்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய் 21-11, 21-14 என ஜப்பானின் மினோரு கோகாவை வீழ்த்தினார். இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-10, 21-18 என சீனதைபேயின் போ-வெய் வாங்கை வென்றார். இந்தியாவின் தருண் 21-12, 21-15 என தென் கொரியாவின் ஹியோக் ஜின் ஜியோனை தோற்கடித்தார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் ஸ்ரீயான்ஷி, அஷ்மிதா, ரக் ஷிதா ஸ்ரீ, ரவுனக் சவுகான், மிதுன் மஞ்சுநாத் தோல்வியடைந்து வெளியேறினர்.
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்