கர்நாடகாவிற்கு கனிமங்கள் கடத்திய 6 லாரி பறிமுதல் தடை விதித்ததால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி
ஓசூர்: கர்நாடகாவிற்கு கனிமங்கள் கடத்திய, 6 லாரி கள் பறிமுதல் செய்-யப்பட்டன. அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் செல்ல, அரசு தடை விதித்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல, 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து, கர்நாடகா, ஆந்-திர மாநிலங்களுக்கு செல்ல, 29 வழித்தடம் உள்ள நிலையில், அவ்வழியாக கனிமங்கள் கடத்துவதை கண்காணிக்க, வருவாய்த்-துறை, போலீசார், கனிம வளத்துறை, போக்குவரத்துத்துறையினர் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனைச்சாவடி-களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.ஓசூர், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில், கர்நாடகாவிற்கு கனிமங்களை கடத்திய, 2 டிப்பர் லாரிகள் பறி-முதல் செய்யப்பட்டன. அதேபோல், பாகலுார் அருகே, சம்பங்-கிரி சோதனைச்சாவடியில் இரு லாரிகளும், தளி அருகே கும்ளா-புரம் சோதனைச்சாடியில், 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்-டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மலைகள், கர்நாடகா மாநிலத்தில் நட க்கும் கட்டுமான தேவைகளுக்காகத்தான் அதிக-ளவில் உடைக்கப்பட்டு, எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லியாக அனுப்பப்பட்டன. உள்ளூர் மக்கள் தேவைகளுக்கு சொற்ப அள-வில்தான் கனிமங்கள் வழங்கப்பட்டன. பெங்களூரு சென்ற கனி-மங்களால், குவாரிகள், கிரஷர் உரிமையாளர்கள் அதிகளவில் லாபம் சம்பாதித்தனர். பசுமை வரி என்ற பெயரில், அரசிற்கு சொற்ப அளவில் தான் லாபம் கிடைத்தது.
பல லாரிகள், பசுமை வரி இல்லாமல், கர்நாடகாவிற்கு கனிமங்-களை கடத்தின. தமிழக அரசின் இந்த உத்தரவால், உள்ளூர் கட்-டுமான பணிக்கு, தடையின்றி கனிமங்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசின் தற்காலிக தடை உத்தரவு, மக்கள் மத்-தியில் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்