பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை: விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்-யக்கோரி, ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்-தது. தமிழக விவசாயிகள் சங்க, மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். இதில், 500-க் கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த, 2026 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்-போது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், 'ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமை-யாக தள்ளுபடி செய்யப்படும்' என, வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின், பல நிபந்தனை விதித்து, பயிர்க்க-டன்களை அரசு முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். தற்-போது நிலுவையிலுள்ள கடன் தொகையை உடனடியாக செலுத்த, கூட்டுறவு சங்கங்களின் மூலம், அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர், என கண்டன கோஷமிட்டனர்.
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்