கட்டடத்திலிருந்து விழுந்தவர் மரணம்

கரும்புக்கடை: கரும்புக்கடை, புட்டுவிக்கி சாலையிலுள்ள, ராயல் கேட்டரிங் நிறுவன குடோனில், கட்டுமான பணி நடக்கிறது. கடந்த 1ல் அறிவொளி நகர், சமத்துவ நகரிலுள்ள அரசு குடியிருப்பை சேர்ந்த காளிதாஸ்,52 சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

எதிர்பாராவிதமாக, 10 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். தலையில் காயமடைந்தவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரும்புக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement