குடிநீர் கேட்டு மக்கள் மறியல் போராட்டம்
காங்கயம்: காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட, 13 வது வார்டு அண்ணா நகரில் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள், தாராபுரம் ரோட்டில் களிமேடு பஸ் ஸ்டாப் அருகில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற காங்கயம் போலீசார் பேச்சு நடத்தினர். உடனடியாக ஆழ்துளை கிணறு குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறினர். இதனால், மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து (1)
Mani . V - Singapore,இந்தியா
05 ஆக்,2026 - 05:06 Report Abuse
காசுக்கு ஓட்டை விற்பனை செய்யும் மக்களே, இது கடந்த மூன்று மாதப் பிரச்சினையா? அப்படியானால் ஏன் கடந்த ஆட்சியில் இதுபோல் மறியல் செய்யவில்லை? 0
0
Reply
மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது
Advertisement
Advertisement