கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி
கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் ஆட்டோ மீது எதிரே வந்த கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் கணேசமூர்த்தி பலியானார்.
கமுதி அருகே பாக்குவெட்டியை சேர்ந்த கணேசமூர்த்தி 24, ஆட்டோ டிரைவர் கோட்டைமேடு பகுதியிலிருந்து பயணிகளுடன் ஆட்டோவில் கமுதி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது குண்டாத்தி வீரன் கோயில் வளைவில் கமுதியில் இருந்து எதிரே வந்த கார் குறுக்கே வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க ஆட்டோ மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில் டூவீலரில் வந்த நல்லுார் முத்துராமலிங்கம், ஆட்டோ டிரைவர் கணேசமூர்த்தி இருவரும் காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கணேசமூர்த்தி இறந்தார்.
ஆட்டோவில் பயணித்த இரண்டு பெண்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கமுதி போலீசார் கார் டிரைவர் மண்டலமாணிக்கம் அலெக்ஸ்பாண்டியன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
––