கூட்டுறவு ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுார் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேலாயுதம் விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி, மாவட்டத் துணைத் தலைவர் பாபு, இணை செயலாளர் ஆதிசங்கரன், ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகி ராமர் வாழ்த்தி பேசினர். ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர் வேல்முருகன் தன் கடமை மற்றும் பொறுப்புகளில் இருந்து தவறி உள்ளார் என காரணம் கூறி எந்த விளக்கமும் கேட்காமல் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மாவட்ட பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement