ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ஆனால்... மார்கோ ரூபியோ சொல்வது இதுதான்...!
வாஷிங்டன்: ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அணுஆயுத ஒழிப்பு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய இரு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது;l ஈரானுடனான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இரு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து வருகிறோம். ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தை பெறக் கூடாது என்பதில் அதிபர் டிரம்ப் மிகவும் தெளிவாக இருக்கிறார். எனவே, ஈரானின் அணுஆயுத ஒழிப்பு என்பது ஒப்பந்தத்தில் மிகவும் முதன்மையானதாகும்.
அடுத்ததாக, உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு விஷயம் ஹார்முஸ் ஜலசந்தி தான். அணு ஆயுத ஒழிப்பு குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் தடையின்றி பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக ஓமன் மற்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறோம். அந்தப் பேச்சுவார்த்ததையில் முன்னேற்றேம் ஏற்பட்டுள்ளதே தவிர, இறுதி முடிவு எட்டப்படவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.