மண் அரிப்பால் சாலை வளைவில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார், ஆக. 6–
வளத்தாஞ்சேரியில், மண் அரிப்பால் சேதமடைந்துள்ள சாலை வளைவில் ஏற்பட்ட பள்ளத்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் சாலையில், போந்துார் அடுத்த தெரேசாபுரத்தில் இருந்து, வளத்தாஞ்சேரி செல்லும் சாலை வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், வளத்தாஞ்சேரி அருகே உள்ள வளைவில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சரிந்து சேதமடைந்து உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும் போது, சேதமான சாலையால் தடுமாற்றம் அடைந்து தொடர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, மண் அரிப்பால் சேதமான சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வு; அமைச்சர் ராஜ்மோகன்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
தொடரும் மின் ஒயர் திருட்டு விவசாயிகள் கவலை
-
அரசு கலை கல்லுாரியில் முதுநிலை சேர்க்கை
-
பெண்ணாடம் கோவிலில் 50 ஆண்டிற்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழா கொடியேற்றம்
-
விளையாட்டு நகராக மதுரை மாற்றப்படுமா: மதுரை வராத அமைச்சர் ஆதவ் அர்ஜூனா