மன்னீஸ்வரர் கோவிலில் இன்று தங்கத் தேரோட்டம்
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், இன்று தங்க தேரோட்டம் நடக்கிறது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அன்னுார் அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் கோவிலில், இன்று காலை 11:00 மணிக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு காவடி ஆட்டம் ஆகியவை நடக்கின்றன. மாலை 6:30 மணிக்கு, கோவில் உட்பிரகாரத்தில், தங்க தேரோட்டம் நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற அறங்காவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
* சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில் இன்று மாலை 5:00 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, 6:30 மணிக்கு உற்சவர் கோவில் வளாகத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கின்றன.
* குன்னத்துார் பழனி ஆண்டவர் கோவிலில் நாளை காலை அபிஷேக, அலங்கார பூஜை, மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வு; அமைச்சர் ராஜ்மோகன்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
தொடரும் மின் ஒயர் திருட்டு விவசாயிகள் கவலை
-
அரசு கலை கல்லுாரியில் முதுநிலை சேர்க்கை
-
பெண்ணாடம் கோவிலில் 50 ஆண்டிற்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழா கொடியேற்றம்
-
விளையாட்டு நகராக மதுரை மாற்றப்படுமா: மதுரை வராத அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Advertisement
Advertisement