நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு உரிமம் வழங்கும் திட்டம்; மீண்டும் தொடங்குகிறது ரிசர்வ் வங்கி

புதுடில்லி: நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு உரிமம் வழங்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் தொடங்க இருக்கிறது. இதற்கேற்ப, கடன் விகிதம் கட்டமைப்பை மறு ஆய்வு செய்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து 6 பேர் கொண்ட குழு விவாதித்தது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பல்வேறு முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய உரிமங்கள் வழங்குவதில் பங்குதாரர்களிடம் பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து, ரிசர்வ் வங்கியானது தேவைகளுக்கு ஏற்ப, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு உரிமம் வழங்கும் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

உலகளவில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகள், அரசியல் மாற்றங்கள் எதிரொலியாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ ரேட் வட்டியானது மாற்றமில்லாமல் 5.25 சதவீதமாக தொடரும். இந்த அறிவிப்பால் தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. ,இப்போதுள்ள இதே வட்டி விகிதம் தொடரும்.

இதுகுறித்து கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது;

உலகளவில் தொடர்ச்சியான நிச்சயமற்ற நிலைமை நிலவுகிறது. ஆனாலும் நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் மீள்திறனில் இருக்கிறது. ஏப்-ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது.

குறுகிய காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். நிதியாண்டின் 3வது காலாண்டில் உச்சத்தை தொட்டு, பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கும்.

இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.

Advertisement