பெருந்திட்ட வளாகத்தில் பூச்செடிகள் நடும் பணி

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் , நகராட்சி சார்பில் செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி நிர்வாகம் சார்பில், துாய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்தின் உதவி மற்றும் நகராட்சி நிதி மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட செடிகள், பூச்செடிகள் நட்டு, பராமரிப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 இப்பணிகள் நகராட்சி கமிஷனர் சியாமளா மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பெருந்திட்ட வளாகத்தில் சாலை தடுப்பு பகுதியில், பூச்செடிகள் நடும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணியை, சுகாதார அலுவலர் ஸ்ரீபிரியா, பொறியாளர் புவனேஸ்வரி, பணி ஆய்வாளர் ஹரிஹரன் ஆய்வு செய்தனர். 

Advertisement