பா.ஜ., வினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவர்னர்:இந்திய கம்யூ.,கண்டனம்

புதுச்சேரி: பா.ஜ., நிகழ்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்திய அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நாரா கலைநாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நாரா கலைநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். புதுச்சேரி மாநில காவல் துறைக்கு ஜனாதிபதியின் சிவப்பு வண்ண கொடி வழங்கும் நிகழ்ச்சியில் போலீஸ்காரர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதற்கு ஏற்பாடு செய்த காவல் துறை தலைமை அதிகாரிகள், வெப்ப சூழலையொட்டி அதற்கு ஏற்ற இடம் தேர்வு செய்திருக்க வேண்டும். அமைச்சர் அமித்ஷா பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்த தேசிய கொடி அணிவகுப்பை புதுச்சேரி மாணவர்களை கொண்டு நடத்தினர்.

இதில் மாணவர்கள் பங்கெடுக்க வழிகாட்டிய அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்ச்சியை காண பா.ஜ., அமைத்த மேடையில் தேசிய தலைவர் நிதின் நிபின், நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் பேரவை தலைவர் செல்வம் ஆகியோர் இருந்த இடத்தில், கவர்னரும் இருப்பது கண்டனத்திற்குரியது. கவர்னர் இனியாவது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement