நாகம்மன் கோவில் செடல் உற்சவத்தில் அன்னதானம்
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் நாகம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செடல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், இரவில் சுவாமி வீதி உலாவும் நடந்து வருகிறது.
நேற்று 4 ம் நாள் உற்சவம் நடந்தது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை முடிந்து, பக்தர்களுக்கு ஆனந்த பவன் மற்றும் நானாஸ் சுவீட்ஸ் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனந்தபவன் குரூப் உரிமையாளர் நாராயணன் தலைமை தாங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் நாச்சியார், சின்மயா ராம்கி, சாசனா, முன்னாள் நகரமன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் மதியழகன், மீனவர் அமைப்பு ஏகாம்பரம், கவுன்சிலர் ராஜ்மோகன், சவுந்தரராஜன், அம்பிகா டெக்ஸ்டைல்ஸ் கவி, கார்த்திக், ஜோதிடர் கோபி, ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை சுவாமி வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். செடல் திருவிழா வரும்,14 ம் தேதியும், மஞ்சள் நீராட்டு விழா 15 ம் தேதியும் நடக்கிறது.
மேலும்
-
மனைவிக்கு பயந்து மண்ணில் புதைத்த ரூ.5 லட்சம்; கறையான் அரித்ததால் விவசாயி கண்ணீர்
-
ஆசிரியர் கல்வியியல் படிப்புகளுக்கு புதுச்சேரி பல்கலையில் இன்று நேரடி சேர்க்கை
-
மது பாட்டில் விற்றவர் கைது
-
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
நாளைய மின்நிறுத்தம் 11ம் தேதி
-
பா.ஜ., வினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவர்னர் இந்திய கம்யூ.,கண்டனம்