அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம் மாநகர செயலாளர் அழைப்பு
கடலுார்: கடலுாரில் இன்று அ.தி.மு.க., சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க, அக்கட்சியின் மாநகர செயலாளர் கார்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் மவுனம் காக்கும் த.வெ.க., அரசை கண்டித்து ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் இன்று (14ம் தேதி) காலை 9 மணிக்கு கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்குகின்றனர். மாவட்ட செயலாளர்கள் (வடக்கு) தாமோதரன், (கிழக்கு) பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழிதேவன், மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன் கண்டன உரையாற்றுகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். எனவே, ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்
-
'பாராட்டு மழையால் பதவி?'
-
'கைதட்டல் கடுப்பை கிளப்புதோ?'
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
'தினமலர்' நாளிதழ் பாதையில் பயணம்!
-
தலைமைச் செயலகம் அருகே இடைத்தரகர்கள் தொல்லை
-
பகிங்ஹாமில் படகு பயணம்!: எண்ணுார் - மாமல்லபுரம் இடையே புது திட்டம்; 'டெண்டர்' கோரியது மெட்ரோ ரயில் நிறுவனம் : சென்னையின் அடையாளமாக மாறப்போகுதாம்!