பகிங்ஹாமில் படகு பயணம்!: எண்ணுார் - மாமல்லபுரம் இடையே புது திட்டம்; 'டெண்டர்' கோரியது மெட்ரோ ரயில் நிறுவனம் : சென்னையின் அடையாளமாக மாறப்போகுதாம்!
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை எண்ணுாரில் இருந்து மாமல்லபுரம் வரை, பகிங்ஹாம் கால்வாயில், 'வாட்டர் மெட்ரோ' எனும் நீர்வழி போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது. திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, பகிங்ஹாம் கால்வாய், சென்னையின் பிரதான அடையாளமாக மாறிவிடும் என்கின்றனர் அதிகாரிகள்.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில், தற்போது மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக, 119 கி.மீ., துாரம் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது, 58 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், 2028க்குள் அனைத்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் முதல் முறையாக, சென்னையில் எண்ணுாரில் இருந்து மால்லபுரம் வரை, 70 கி.மீ., துாரத்துக்கு, பகிங்ஹாம் கால்வாயில், 'வாட்டர் மெட்ரோ' சேவையை தொடங்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் நீர்வழி போக்குவரத்து வசதிக்காக, எண்ணுாரில் இருந்து மாமல்லபுரம் வரை, 70 கி.மீ., துாரம் 'வாட்டர் மெட்ரோ' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 7.43 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள், எட்டு மாதங்களில் முடிக்கப்படும்.

* சாத்தியக்கூறு அறிக்கைக்காக, தற்போதைய போக்குவரத்து வசதிகள், எதிர்கால போக்குவரத்து தேவை, பயணியர் எண்ணிக்கை, நீர்வழித்தட வரைபடம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்
* சுற்றுச்சூழல் பாதிப்பு, வெள்ளப்பெருக்கு மதிப்பீடு, நீரின் தர ஆய்வு மற்றும் நீர்வழிப் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். முனையங்கள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்படும்
* திட்டத்திற்கான நிதி வாய்ப்புகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ரீதியான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும்
* விரிவான திட்ட அறிக்கையில், விரிவான பொறியியல் வடிவமைப்பு, புவியியல் மற்றும் மண் ஆய்வு, பயன்பாட்டு சேவைகளுக்கான வரைபடம் ஆகியவை இடம்பெறும். அத்துடன், விரிவான திட்டச் செலவு, தொழில்நுட்ப விபரக்குறிப்புகள், கட்டுமான முறைகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் தெரிவிக்கப்படும்
* இந்த வழித்தடம், ரயில், மெட்ரோ மற்றும் பிற பொதுப்போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். சாத்தியக்கூறு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசின் ஒப்புதல் பெற்றதும் பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததும், சென்னையின் அடையாளமாக பகிங்ஹாம் கால்வாய் மாறிவிடும் என, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், நாட்டில் உள்ள முக்கியமான, 18 நகரங்களில், 'வாட்டர் மெட்ரோ' திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
சுற்றுலா மேம்படும்
* வாட்டர் மெட்ரோ வெறும் நீர் வழி போக்குவரத்து மட்டும் இன்றி, நகரின் சுற்றுலா பயணியர் வருகைக்கு வழிவகுக்கும். இதன் கட்டமைப்புகளால், பகிங்ஹாம் கால்வாய் துார்வாரி முறைப்படுத்தப்படும்
* பகிங்ஹாம் கால்வாய் நீரை சுத்திகரிக்கவும், கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் முடியும்.
* குறுகிய துாரத்துக்கு, மணிக்கு அதிகபட்சமாக, 25 கி.மீ., வேகம் செல்லும் திறனாக இருக்கும்
* சென்னையில் வெள்ளப்பெருக்கை தடுப்பதோடு, நிலத்தடி நீர் மட்டம் மேம்படும்
* பயணியர் வசதிக்காக, கால்வாய் ஓரமாக பூங்காங்கள் அமைப்பது, அடிப்படை வசதி மேம்படுத்துவது, அதிகமாக மரங்களும் நடப்படும்
* கரையோரங்களில் முக்கிய பகுதிகளில் உணவகங்கள், பொழுது போக்கு மையங்களும் அமைக்கப்படும்.
வழிகாட்டும் கேரளா
கேரள மாநிலம், கொச்சியில் 'வாட்டர் மெட்ரோ' சேவை செயல்பாட்டில் உள்ளது. மொத்தம், 72 கி.மீ., துாரம், 38 முக்கிய முனையங்களை இணைக்கும் வகையில், 78 வாட்டர் மெட்ரோ மின்சார படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மின்சார படகு விலை, ஏழு கோடி ரூபாய்; 24 மீட்டர் நீளம் கொண்டது. ஒரே நேரத்தில், 100 பேர் வரை பயணம் செய்யலாம்.
சுற்றுலா பயணியர் மத்தியில், பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால், ஆழப்புழா, கொல்லம் ஆகிய பகுதிகளிலும் 'வாட்டர் மெட்ரோ' திட்டத்தை விரிவுபடுத்த, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் இருப்பது நல்ல தண்ணீர், நாற்றம் இல்லாத தண்ணீர்.. சென்னையை சுற்றி இருப்பது சாக்கடை நாற்றம் எடுத்த தண்னீர்.. முதலில் தண்ணீரை சுத்தப்படுத்தி ஆக்கிரமிப்பை அகற்றி தூய்மையாக்குங்கள்.. கேரளா என்ற புலியை பார்த்து சூடு போட்டுக்கொள்ள வேண்டாம்
நல்ல திட்டம். ஈ.சி. ஆர் போன்ற சாலைகளில் நெரிசலை தவிர்க்க உதவும்.
கேரளாவில் இயற்கையான நல்ல நீரோட்டம் உள்ளது. ஆனால் இங்கு சென்னையில்? இந்த கால்வாய்க்கு நீரோட்டம் எங்கிருந்து வரும்? எல்லாம் வாய் சவடால்தான்மேலும்
-
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
-
ஆடிப்பூரம் / திருவிளக்கு வழிபாடு
-
பள்ளிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள்; அரசு பதிலளிக்க ஐகோர்ட் அவகாசம்
-
திருட்டு சம்பவங்கள் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பாலப்பன்பட்டி மக்கள் வலியுறுத்தல்
-
அரசு களப்பணியாளருக்குப் பாராட்டுச்சான்றிதழ்
-
வலிமை பெற்ற வளை கரங்கள் ஜூடோவில் மாணவியர் அசத்தல்