டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்; பயணிகள் 2 பேர் கைது
புதுடில்லி; டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு ஆண் பயணியரிடம், 10 கோடி ரூபாய் மதிப்பிலான 10.5 கிலோ , 'ஹைட்ரோபோனிக்' கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகவீரியம் கொண்ட 'ஹைட்ரோபோனிக்' கஞ்சா, அவ்வப்போது தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்படுகிறது. இந்நிலையில், இந்திரா காந்தி விமான நிலையத்தில், தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, சந்தேகத்துக்குரிய இரு பயணியரிடம் சோதனை நடத்தினர்.
அவர்கள் இருவரும் தங்களின் உடமைகளுக்குள் 10.5 கிலோ கஞ்சாவை பதுக்கி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பாராட்டு மழையால் பதவி?'
-
'கைதட்டல் கடுப்பை கிளப்புதோ?'
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
'தினமலர்' நாளிதழ் பாதையில் பயணம்!
-
தலைமைச் செயலகம் அருகே இடைத்தரகர்கள் தொல்லை
-
பகிங்ஹாமில் படகு பயணம்!: எண்ணுார் - மாமல்லபுரம் இடையே புது திட்டம்; 'டெண்டர்' கோரியது மெட்ரோ ரயில் நிறுவனம் : சென்னையின் அடையாளமாக மாறப்போகுதாம்!
Advertisement
Advertisement