108 ஆம்புலன்ஸ் சங்க கூட்டம்

கோவை: 108 ஆம்புலன்ஸ் தொ.மு.ச. மாவட்ட கலந்தாய்வு கூட்டம், சங்க தலைவர் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடந்தது.

கோவை மண்டல தலைவர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் ஊதியம், பணிச்சலுகைகள், பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

தொழிலாளர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு, போனஸ் ஆகியவற்றை உடனே அமல்படுத்த வேண்டும். எட்டு மணி நேர வேலை என்பதை உறுதி செய்வதோடு, வருகைப்பதிவை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். குடும்ப மருத்துவ காப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட துணைத்தலைவர் காளீஸ்வரன், துணைச் செயலாளர் தங்கதுரை  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

Advertisement