கல்வி நிதி உயர்த்த ஆர்ப்பாட்டம்
கோவை: மாநில பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி, உயர்க்கல்வித்துறைக்கு சேர்த்து ரூ.52,920 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆட்சியை விட (ரூ.55,261 கோடி) விட குறைவு. பள்ளி, கல்லுாரி, பல்கலைகளின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல், தொழில்நுட்ப சேவை அதிகரித்தல், தரமான கற்றல் அனுபவங்கள் அளித்தல், காலியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ள, நிதியை அதிகரிப்பது அவசியம். கடந்த 2016–17 ல், மாநில மொத்த வருவாயில் 17.7 சதவீதம் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது கடந்தாண்டை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில், தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு, நேற்று ஆர்பாட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் பேசுகையில்,‘‘ தாய்மாமன் தங்க மோதிரம், அண்ணன் சீர் திட்டம் ஆகியவற்றிற்கு, ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகள் உள்கட்டமைப்பிற்கு 300 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான நிதியை, இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பு, 10,000 கோடி அதிகரிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி அட்மிஷன், கட்டணம் உள்ளிட்ட நடைமுறைகளை ஆன்லைன் மயமாக்க வேண்டும்,’’ என்றார்.
மேலும்
-
'பாராட்டு மழையால் பதவி?'
-
'கைதட்டல் கடுப்பை கிளப்புதோ?'
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
'தினமலர்' நாளிதழ் பாதையில் பயணம்!
-
தலைமைச் செயலகம் அருகே இடைத்தரகர்கள் தொல்லை
-
பகிங்ஹாமில் படகு பயணம்!: எண்ணுார் - மாமல்லபுரம் இடையே புது திட்டம்; 'டெண்டர்' கோரியது மெட்ரோ ரயில் நிறுவனம் : சென்னையின் அடையாளமாக மாறப்போகுதாம்!