சுங்க அதிகாரி விபத்தில் பலி 

கோவை: கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் அசீம், 41. முன்னாள் சந்தோஷ் டிராபி கால்பந்து வீரர். அவிநாசி ரோடு, சிட்ரா சந்திப்பு அருகே நேற்று, அதிகாலை பைக்கில் பணிக்கு சென்று கொண்டிருந்த போது லாரி மோதி உயிரிழந்தார்.

மலப்புரத்தை சேர்ந்த இவர், தேசிய அளவில் கால்பந்து போட்டிகளில் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதியாக பங்கேற்று விளையாடியவர். 2013ம் ஆண்டு தமிழக அணிக்காகவும், சந்தோஷ் டிராபி போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார்.  

Advertisement