தபால் தலைகள் காண்காட்சி
கோவை: கோவை மாவட்ட தபால் தலைகள் சேகரிப்பாளர்கள் அசோசியேஷன் சார்பில், தபால் தலைகள், தபால் உரைகள் மற்றும் முத்திரைகள் காண்காட்சி, பீளமேடு நேஷனல் மாடல் பள்ளி அரங்கில் நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது. நேஷனல் மாடல் பள்ளி தாளாளர் மோகன் சந்தர் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
கண்காட்சியில், 22 தபால் தலைகள் சேகரிப்பாளர்கள், தங்களின் சேகரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர். தபால் துறை அறிமுகமான காலத்தில் இருந்து தற்போது வரை, வெளியிடப்பட்ட பல நாட்டு தபால் தலைகள், தபால் உறைகள் மற்றும் முத்திரைகள் என, 5000 மேல் இடம் பெற்றள்ளன. தபால் தலைகள் சேகரிப்பாளர்கள் அசோசியேஷன் செயலாளர் சுரேந்தர் கூறுகையில்,‘‘முன்னர் குழந்தைகள், பெரியவர்கள் என, ஏராளமானவர்கள் தபால் தலைகள் சேகரிப்பில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தனர். இப்போது குழந்தைகளின் ‘ஹாபி’ மாறிவிட்டன. சோசியல் மீடியாக்கள் அதிகம் வந்து விட்டதால், ஆர்வம் அதில் போய் விட்டது. இது போன்ற கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டால், தபால் சேகரிப்பில் ஆர்வம் வரும் என்ற நோக்கில் இக்கண்காட்சியை நடத்துகிறோம். மூன்று நாள் நடக்கும் இந்த கண்காட்சியை கோவையில் உள்ள, 20 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பார்வையிட உள்ளனர்,’’ என்றார்.
மேலும்
-
'பாராட்டு மழையால் பதவி?'
-
'கைதட்டல் கடுப்பை கிளப்புதோ?'
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
'தினமலர்' நாளிதழ் பாதையில் பயணம்!
-
தலைமைச் செயலகம் அருகே இடைத்தரகர்கள் தொல்லை
-
பகிங்ஹாமில் படகு பயணம்!: எண்ணுார் - மாமல்லபுரம் இடையே புது திட்டம்; 'டெண்டர்' கோரியது மெட்ரோ ரயில் நிறுவனம் : சென்னையின் அடையாளமாக மாறப்போகுதாம்!