பொங்கல் விழா

மானாமதுரை,ஆக.16-

மானாமதுரை சோனையா சுவாமி கோயிலில் வாரச்சந்தை காய்கறி மற்றும் இலை வியாபாரிகள் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை நடந்தது. மாலை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பூஜை பொருட்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். முன்னதாக அன்னதானமும், இரவு கோயில் முன் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

Advertisement