(ரெசிபி 3) ஆந்திர ஸ்டைல் பூதரேகலு
தேவையான பொருட்கள்பச்சரிசி அரை கப் தண்ணீர் 6 கப் எண்ணெய் சிறிது நெய் சிறிது நாட்டுச்சக்கரை 1 கப்பாதாம், பிஸ்தாமுந்திரி, வால்நட் / பொடித்தது 3/4 கப்ஏலப்பொடி ஒரு ஸ்பூன்
செய்முறை :முதலில் அரை கப் பச்சரிசியை தண்ணீரில் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். இதனை வடிகட்டியில் வடிகட்டி திரும்பவும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு கப் நீர் விட்டு அரைத்து திரும்பவும் வடிகட்டவும். இந்த மாவின் பதம் தேங்காய் பால் பதத்திற்கு இருக்க வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் பேப்பர் ஸ்வீட் சரியாக வராது. எனவே நைசாக நீர்க்க அரைத்து வடிகட்டி தேங்காய் பால் பதத்திற்கு மாவை எடுத்துக் கொள்ளவும்.நான் ஸ்டிக் கல்லில் கொஞ்சமாக எண்ணெயை தடவி ஒரு சிறு காட்டன் துணியை மாவில் முக்கி தவா மிதமான சூட்டில் இருக்கும் போது மெல்லியதாக தேய்க்கவும். இவை முப்பதே செகண்டில் தானாக கல்லில் இருந்து பிரிந்து வந்துவிடும்.ஸ்டபிங் செய்வதற்கு: தேவையான அளவு பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அத்துடன் நாட்டுச்சக்கரை பவுடர், ஏலப்பொடி சேர்த்து ஸ்டப்பிங் ரெடி பண்ணவும்.இதனை பப்ஸ் போல மடிக்கலாம் அல்லது ரோல் செய்து சாப்பிடலாம். வாயில் வைத்த உடனையே கரைந்து விடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அருமையான ஸ்வீட்.
மேலும்
-
சேதமடைந்த பேவர் பிளாக் ரோடுகள், புதர் மண்டிய நீர்வரத்து ஓடைகள் சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்
-
அரசு தேங்காய் கொள்முதல் செய்ய தென்னை விவசாயிகள் கோரிக்கை
-
கர்நாடகா வனத்துறை என்கவுன்டர்; வேட்டை கும்பலில் மூவர் உயிரிழப்பு
-
ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தினம்
-
அரிஸ்டோ பள்ளியில் சுதந்திர தினம்
-
சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சுதந்திர தினம்