வட்டார விளையாட்டு போட்டி மாணவர்களுக்கு பாராட்டு
செஞ்சி: செஞ்சி சாணக்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இப்பள்ளி மாணவ, மாணவியர் வட்டார அளவில் ஆலம்பூண்டியில் நடந்த செஸ், சிலம்பம், இறகுப்பந்து, வலைப்பந்து, தடகளம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று பல்வேறு பிரிவுகளில், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
இந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. தாளாளர் தேவராஜ், துணை தாளாளர் வேல்முருகன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர். மாநில அளவில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி முதல்வர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு
-
சென்னை ஐஐடி எம்பிபிஎஸ், எம்டி பட்டங்களையும் வழங்கும்; இயக்குநர் காமகோடி அறிவிப்பு
-
மீன் உருவ சுடுமண் அச்சு கீழடியில் கண்டெடுப்பு
-
சமூக வலைதள செயல்பாடு; பிரதமர் மோடி முதலிடம்
-
புலியுடன் செல்பி எடுத்தபோது நகத்தில் கீறியது; தொற்றுக்கு ஆளான சிறுமி மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்பு
-
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி; 20 பேர் மருத்துவமனையில் அனுமதி
Advertisement
Advertisement