தென்னிந்திய ஹாக்கி போட்டி வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி: தென்னிந்திய அளவிலான நடந்த ஹாக்கி போட்டி நிறைவு விழாவில், வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி ஹாக்கி டெவலப்மெண்ட் சொசைட்டி சார்பில், ஹாக்கி வாரியர் கலை மற்றும் சுஜித் மெமோரியல் டிராபி இரண்டாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஹாக்கி போட்டி தவளக்குப்பத்தில் நடந்தது.

இப்போட்டியில், 12 அணிகள் பங்கேற்றன. இதில், பாலக்கோடு ஜூனியர் பாய்ஸ் அணி முதலிடத்தையும், ஹாக்கி வாரியர்ஸ் அணி இரண்டாமிடத்தையும், ஹாக்கி டெவலப்மெண்ட் சொசைட்டி அணி மூன்றாமிடத்தையும், வி.எஸ்.பாய்ஸ் அணி நான்காமிடத்தையும் பிடித்தன.

வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக ராமு எம்.எல்.ஏ., பங்கேற்று பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், புதுச்சேரி ஹாக்கி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement