பொதுப்பணித்துறை பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நடக்கும் பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், பொதுப்பணித் துறையின் மூலம் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவை, முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் சந்தித்து பேசினார். 

அதில்,  தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும். அப்பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், இதுவரை துவங்கப்படாமல் உள்ள பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைவில் துவங்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் சாலை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் தொடர்பான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில், சபாநாயகர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement