100ல் '1' ஐ நீக்கினால் அதுதான் த.வெ.க., மதிப்பு: அ.தி.மு.க., கிண்டல்
கிருஷ்ணகிரி: அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நேற்று அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலுக்கு முன், த.வெ. க.,வினர் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறை வேற்றவில்லை.
இந்த நுாறு நாள் ஆட்சியில் மக்களுக்கான திட்டம் என எதுவும் இல்லை. ஏற்கனவே உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்றி, 'வெற்றி' என, ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர்.
100 நாள் ஆட்சியில், '1'ஐ நீக்கி விட்டால், மீதி உள்ளது தான் த.வெ.க., அரசின் மதிப்பு. முதல்வர் விஜய், ஜோசியர் அறிவுரையை கேட்டு, தனது அலுவலக அறையை மாற்றுகிறாரோ என தோன்றுகிறது. முதல்வர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகள் 90 சதவீதம் முடிந்த பிறகு, டெண்டர் விடுவது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (1)
M Ramachandran - Chennai,இந்தியா
20 ஆக்,2026 - 10:09 Report Abuse
தான் ஒரு பூச்சியம் என்று நிறுபணமாகியும் தெரியவில்லை. 0
0
Reply
மேலும்
-
ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு
-
சென்னை ஐஐடி எம்பிபிஎஸ், எம்டி பட்டங்களையும் வழங்கும்; இயக்குநர் காமகோடி அறிவிப்பு
-
மீன் உருவ சுடுமண் அச்சு கீழடியில் கண்டெடுப்பு
-
சமூக வலைதள செயல்பாடு; பிரதமர் மோடி முதலிடம்
-
புலியுடன் செல்பி எடுத்தபோது நகத்தில் கீறியது; தொற்றுக்கு ஆளான சிறுமி மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்பு
-
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி; 20 பேர் மருத்துவமனையில் அனுமதி
Advertisement
Advertisement