மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

முகாமிற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். காது, மூக்கு, தொண்டை டாக்டர் ராஜேஸ்வரி, மன நல டாக்டர் சரவணன், கண் டாக்டர் ரேவதி ஆகியோர் மாற்றுத் திறனாளிகளின் உடல் நலனை பரிசோதித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உடல் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் முகாமில் பங்கேற்றனர். இதில், 40 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புடைய 55 பேருக்கு யு.டி.ஐ.டி., பதிவு எண்ணுடன் கூடிய மருத்துவச் சான்று வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement