'ஏசி' அரசு பஸ்கள் இயக்கம்; தினமும் ரூ.2.50 கோடி நஷ்டம்
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி - தார்வாட் இடையே, 'ஏசி' பஸ்கள் இயக்கும் திட்டத்தால், ஒரு நாளைக்கு, 2.50 கோடி ரூபாய் போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கர்நாடகாவின் இரட்டை நகரம்' என அழைக்கப்படும் ஹூப்பள்ளி - தார்வாட் இடையே தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் பஸ்சில் பயணிக்கின்றனர். பயணியரின் வசதிக்காக, அதிநவீன, ஏசி பஸ்களை, மாநில அரசு, 2018ல் கொண்டு வந்தது. இதற்கு, 'சிகாரி திட்டம்' என பெயரிடப்பட்டது. 100 ஏசி பஸ்கள் சேவைக்கு வந்தன.
இத்திட்டம், என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., எனும் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பஸ்களின் பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளதால், போக்குவரத்து கழகத்தால் சமாளிக்க முடியவில்லை. பஸ்சின் உதிரிபாகங்களை மாற்றுவதற்கு செய்யப்படும் செலவும் அதிகமாக இருப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது.
எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பஸ்சை இயக்க, 1 கி.மீ.,க்கு, 80 ரூபாய் செலவாகிறது. ஆனால், வருவாய், 50 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.
இதனால், என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., கடும் நிதிச்சுமையில் சிக்கி உள்ளது. சிகாரி திட்டத்தால், ஒரு நாளைக்கு, 2.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், வரும் காலத்தில் இத்திட்டம் தொடருமா என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.
மேலும்
-
செய்தி மக்கள் தொடர்பு துறை முறைகேட்டில் சிக்குவது யார்?
-
பஸ் வசதியில்லா மலை கிராமங்கள்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவலம்
-
பழமொழி
-
366 கோவில்களில் ரூ.245 கோடியில் திருப்பணி: அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
-
ஒரு மாதத்தில் ரூ.12,000 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!
-
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார்