விஜயகாந்த் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
கடலுார்: கடலுார் அடுத்த கண்ணாரப்பேட்டையில் தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ாவட்ட அவை தலைவர் ராஜாராம் தலைமை தாங்கி, விஜயகாந்த் படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 250 பேருக்கு அன்னதானம், சேலை உள்ளிட்ட நலத்திட்ட வழங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வள்ளி வரவேற்றார். டாக்டர்கள் ராஜபிரபு, திவாகர் முன்னிலை வகித்தனர்.விழாவில் மாவட்ட பொருளாளர் ராஜ், துணை செயலாளர் சித்தநாதன், மாநகர செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் கலாநிதி, மாவட்ட ஊடக பிரிவு ராஜா, மாநில பொதுக்குழு வைத்தியநாதன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரபு, துணை செயலாளர் கோபால்ராம் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய அவை தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.முன்னதாக கடலுார், ஜவான்ஸ்பவன் அருகில் ஏழைகளுக்கு அன்னதானமும், கடலுார், வண்டிப்பாளையம் 32வது வார்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் மாவட்ட அவை தலைவர் ராஜாராம் வழங்கினார்.
வார்டு செயலாளர் பிச்சாண்டி, அவை தலைவர் முருகன் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், மகேந்திரன், மதிவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் காலி மதுபாட்டில்கள் சமூக வலைத் தளங்களில் வீடியோ வைரல்
-
பராமரித்தல் மின்பிரிவு மையம் இடமாற்றம்
-
சரஸ்வதி வித்யாலயாவில்மாணவர் அணி தேர்வு
-
விடுதி செய்தியில் ஆட்...
-
போக்குவரத்து தலைமை காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட்
-
பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள் இரவிலும் தொடர்ந்த போராட்டம்; அமைச்சர் சமரச பேச்சு