போக்குவரத்து தலைமை காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட்
சென்னை, ஆக. 26–
லாரி ஓட்டுநரிடம் பணம் வாங்கியதாக எழுந்த புகாரில், போக்குவரத்து தலைமை காவலர்கள் இருவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர் – எண்ணுார் விரைவு சாலை எல்லையம்மன் கோவில் சந்திப்பில் கடந்த, 21 ம் தேதி, திருவொற்றியூர் போக்குவரத்து தலைமை காவலர்கள் அந்தோணி ஜான்சன், தட்சிணா ஆகியோர் பணியில் இருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர்களிடம், பணம் வாங்கியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பான விசாரணையில் சம்பவம் உண்மை என, தெரிந்ததையடுத்து சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சாமுண்டீஸ்வரி உத்தரவின்படி திருவொற்றியூர் போக்குவரத்து தலைமை காவலர்கள் அந்தோணி ஜான்சன், தட்சிணா ஆகிய இருவரும் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் காவல் துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
–––––––––––––––––––
மேலும்
-
பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து: முதல்வர் அறிவிப்பின் பின்னணி என்ன?
-
வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்!: சபாநாயகர் அறிவுரை
-
காரைக்கால் தொழிலதிபரிடம் ரூ. 1.2 லட்சம் ‘அபேஸ்’
-
இருட்டில் தெரியாத வேகத்தடையால் ஆட்டோ கவிழ்ந்து பெண் ஓட்டுநர் பலி
-
வங்கி கடன் பெற்று ரூ.21 கோடி மோசடி தம்பதியுடன், வங்கி மேலாளரும் கைது